அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு இன்று விசாரணை நடைபெற உள்ளது. கடந்த ஜுலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதி அமர்வு  தீர்ப்பு அளித்ததை எதிர்த்து கட்சியின் ஒருங்கினைபாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் இரு நீதிபதிகள் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென அவர் கூறியிருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி  அமர்வு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

அவர் அளித்த பதில் மனுவில் ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவை கட்சி முறைப்படி முறையாக நடத்தப்படவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறுவது உண்மையில்லை என்றும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மட்டுமே அவர் வழக்கு தொடர்ந்துள்ளதாக தீர்மானங்களை பற்றி அவர் கேள்வி எழுப்ப முடியாது என்றும் கூறியிருந்தார். எனவே ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் மனுவில் கூறியிருந்தார். இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இவ்வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனால் இரு தரப்பினரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

இதனிடையே அதிமுகவின் எதிர்காலம் நீதிமன்றத்தில் கையில் இருப்பதாக தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னை காப்பாற்றி கொள்வதற்காகவே அதிமுகவை அழிக்க பழனிசாமி உறுதியாக இருப்பதாக குற்றம் சாட்டினார். இதனிடையே பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது பண்ணை வீட்டில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் சந்தித்த ஓபிஎஸ் அணி கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்து உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கரூர், சேலம் பகுதிகளில் உள்ள எடப்படி அணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ்- சை சந்தித்து அவரது அணியில் இணைந்தனர். இதைப்போல் ஓபிஎஸ் அணியில் இருந்த சில பேர் எடப்படி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தலைமை பதவிக்காக இரு தலைவர்கள் நடத்தும் சண்டைகளால் தொண்டர்கள் சோர்வடைந்தனர்.

Related Stories: