நாடாளுமன்ற தேர்தலில் திமுக 40 தொகுதியிலும் வெற்றி பெறும்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேச்சு

சென்னை: ‘‘திமுக அரசு சொன்னதை செய்ததால் நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்’’ என்று அமைச்சர் நாசர் பேசினார். திருவள்ளூர் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் காக்களூர் பைபாஸ் சாலையில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று பேசியதாவது:

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து சொன்னதை மட்டுமல்லாமல், சொல்லாததையும் செய்து நாட்டு மக்களிடையே தமிழக அரசு பாராட்டை பெற்றிருக்கிறது. இதனால் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக அபார வெற்றி பெறும். திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.  இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக திமுக விளங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: