×

தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக இளைஞரணி திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்: டி.ஆர். பாலு எம்பி பங்கேற்பு

தாம்பரம்:  தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையில் பழைய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தாம்பரம் சட்டமன்றத் தொகுதி திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நேற்று மாலை நடந்தது. இதில்,  தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமை தாங்கினார். இதில், திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி என்.சிவா எம்.பி, திமுக செய்தி தொடர்பு துறை துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், நியமனக்குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, பகுதி கழகச் செயலாளர்கள் செம்பாக்கம் இரா.சுரேஷ், ஆ.நடராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சங்கர், படப்பை மனோகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Dizhaga Yunarani Dhravidi ,Passara ,Tambaram ,Assembly Constituency ,D.C. ,Palu MB , Thambaram Assembly Constituency, DMK Ilajanarani, Dravida Model Training Center, DR. Balu MP participation
× RELATED பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு:...