`ஒன்றிய அரசில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் வேண்டும்’

சென்னை: ஒன்றிய அரசில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என பாரத மக்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாரத மக்கள் கழகம் தலைவர் பிரபாகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மீனவர்களை மண்டல் கமிசஷன் பரிந்துரைப்படி பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். பாரம்பரியமாக கடற்கரையில் வசித்துவரும் மீனவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்தி பிரீமியத்தை அரசே கட்டவேண்டும். ஆறு, குளம், ஏரி, மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமையை பாரம்பரிய மீனவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். அதேபோல், ஒன்றிய அரசில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்.

வெளிநாடுகளில் மீன்பிடிக்க சென்று சிறைபடும், காணாமல் போகும் மீனவர்களை மீட்க வெளியுறவுத்துறையில் தனிப்பிரிவு அமைக்கவேண்டும். மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை மாதத்திற்கு ரூ.10,000 உயர்த்த வேண்டும். தேசிய மீனவர் மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும். ஆற்று முகத்துவாரங்களை ஆழப்படுத்தி ஆற்றுநீர் நிரந்தரமாக கடலில் செல்ல வகைச்செய்ய வேண்டும்.இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: