உதயநிதி நற்பணி மன்றம் மூலம் ஆதம்பாக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகம்: அமைச்சர் தா.மோ அன்பரசன் திறந்து வைத்தார்

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் உதயநிதி நற்பணி மன்றம் மூலம் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை அமைச்சர் தா.மோ அன்பரசன் திறந்து வைத்தார். ஆலந்தூர் 163வது வார்டுக்கு உட்பட்டது பார்த்தசாரதி நகர். இங்குள்ள, நூலகத்தை உதயநிதி  நற்பணி மன்றம் மூலம்  புதுப்பிக்கப்பட்டு, அதன் திறப்பு விழாவை நேற்று முன்தினம் நடந்தது. விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் கே. ஆர்.ஆனந்தன் தலைமை வகித்தார். நற்பணி மன்ற அறங்காவலர் பி.கே. பாபு மன்ற மாவட்ட பொருளாளர் இளமாறன் முன்னிலை வகித்தார். நூலகர் எஸ்.எம் தேவி வரவேற்றார்.

இந்த விழாவில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த விழாவில் அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  விழாவில், நூலகத்திற்கு தேவையான நூல்கள் மற்றும் உபகரணங்களை பலரும் மனமுவந்து வழங்கினர்.

Related Stories: