கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென நேற்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 10.20 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி சென்றுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மூத்த ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவர்னர் ஆர்.என்.ரவி இன்றும் டெல்லியில் இருப்பார் கூறப்படுகிறது. இன்று இரவே அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: