தண்டையார்பேட்டை 4வது மண்டலத்தில் 2.000 பேருக்கு கொசுவலைகள் : மண்டல குழுத்தலைவர் வழங்கினார்

தண்டையார்பேட்டை:  பெருநகர சென்னை மாநகராட்சியில் நீர்நிலை பகுதிகளில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு கொசுவலைகள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில், கடந்த  சில தினங்களுக்கு முன்பு தண்டையார்பேட்டை 4வது மண்டலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு 15,000 பேருக்கு கொசுவலைகளை வழங்கி துவக்கி வைத்தார்.  

அதனைத் தொடர்ந்து நேற்று காலை தண்டையார்பேட்டை வினோபா நகரில் 38வது வார்டு நீர்வழித்தடங்கள் அருகாமையில்  வசிக்கும் பொதுமக்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் நேதாஜிகணேசன் கலந்துகொண்டு 2000 பேருக்கு கொசுவலைகளை வழங்கினார். இதில், வட்டச் செயலாளர் சுந்தர், பொது சுகாதாரத்துறை மண்டல நல அலுவலர் டாக்டர் சாய்சுதா,  சுகாதார ஆய்வாளர் ரவிக்குமார், துப்புரவு அலுவலர் சதீஷ்குமார் உள்பட  அதிகாரிகள், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: