×

மோடி - மம்தா டிச.5ல் சந்திப்பு

கொல்கத்தா: டெல்லியில் பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் டிச.5ம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒன்றிய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தல் பாஜ.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றியணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் பேசிய மம்தா, ‘மாநிலங்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகைக்காக ஒன்றிய அரசிடம் பிச்சை எடுக்க வேண்டுமா? நிலுவை தொகையை உடனடியாக தரவிட்டால் ஜிஎஸ்டி செலுத்துவதை நிறுத்தி விடுவோம்,’ என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

இந்த சூழ்நிலையில், டிசம்பர் 5ம் தேதி டெல்லியில் முதல்வர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடியை, மம்தா பானர்ஜி தனியாக சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது, மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை ஒன்றிய அரசு உடனே விடுவிப்பது, பராக்கா தடுப்பணை விவகாரம் உட்பட முக்கிய பிரச்னைகள் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Modi ,Mamata , Modi - Mamata meet on Dec 5
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...