எஸ்ஐ கையெழுத்தை போலியாக போட்ட போலீஸ்காரர் சஸ்பெண்ட்: திருச்சி எஸ்பி அதிரடி

முசிறி: எஸ்ஐ கையெழுத்தை போலியாக போட்ட போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்து திருச்சி எஸ்பி நேற்று உத்தரவிட்டார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர் செல்வராஜ். இவர், காவல் நிலையத்தில் புகார் தர வரும் பொதுமக்களிடம் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது. விசாரணையில், புகார்தாரருக்கு கொடுக்கப்பட்ட மனுவில் சப் இன்ஸ்பெக்டர் அருண் கையெழுத்தை போலியாக போட்டு போலீஸ்காரர் செல்வராஜ் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியதில் செல்வராஜ் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து செல்வராஜை, மாவட்ட எஸ்பி சுஜித்குமார் சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். இவர் ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன்பு லால்குடி காவல் நிலையத்தில் பனிபுரிந்த போதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: