×

மாநகராட்சி பெண் மேயர்களுக்கு கோவையில் 4 நாட்கள் பயிற்சி

வேலூர்: மாநகராட்சி பெண் மேயர்களுக்கு கோவையில் இன்று முதல் 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.  தமிழகத்தில் வார்டு கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர்கள், கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் என்று அவர்களது பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சென்னை பெருநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகளில் சென்னை, வேலூர் உள்ளிட்ட அனைத்து பெண் மேயர்களுக்கும் இன்று தொடங்கி வரும் 24ம் தேதி வரை 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி ேகாவையில் உள்ள நகரியல் பயிற்சி மையத்தில் தொடங்குகிறது.இதில் மேயர்களுக்கான பணிகள் என்னென்ன? நிர்வாக ரீதியாக அவர் கள் என்ன நடவடிக்கை எடுக்கலாம். வளர்ச்சி திட்டங்களை எப்படி மேற்கொள்வது உள்ளிட்ட விரிவான தகவல்கள் அளிக்கப்பட உள்ளது. சென்னை, வேலூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பெண் மேயர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.


Tags : Coimbatore , 4 days training in Coimbatore for women mayors of the Corporation
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...