காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் வழக்குகளிலிருந்து எடப்பாடி பழனிசாமி விடுபட சிறப்பு யாகம்

சென்னை: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர்கோயிலில் முன்னாள் முதல்வர் எடபாடி கே.பழனிசாமி வழக்குகளிலிருந்து விடுபட வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதிமுக  பொதுசெயலாளரும் முன்னாள் முதல்வருமான  ஜெ.ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு இரட்டை தலைமை தொடர்பான சிக்கல் எழுந்த நிலையில் பொது செயலாளர் யார் என்பதில் போட்டா போட்டிகள் நிலவியது. இதன்‌ காரணமாக இபிஎஸ்‌ மற்றும் ஓபிஎஸ் இருவரும் தனித்தனியே இரு அணிகளாக பிரிந்து இபிஎஸ் தலைமையில் பொதுக்குழுவானது கூட்டப்பட்டு ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்களையும் கட்சியிலிருந்து நீக்கி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் வழக்கானது தொடரப்பட்டு, நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம்  வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் முன்னாள் தமிழக முதல்வர் கே. எடப்பாடி பழனிசாமி வழக்கிலிருந்து விடுபட்டு பொதுசெயலாளராக வேண்டியும், அதிமுக கட்சி எல்லா விதமான பலமும் பெற்று நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் அமோக வெற்றி பெற வேண்டும். மீண்டும், எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைந்திட வேண்டியும், அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் தாடி மா.ராசு தலைமையில் காஞ்சிபுரம்  வழக்கறுத்தீஸ்வரர்கோயிலில் யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: