×

இந்தோனேசியா சிறையில் இருந்து 3 மீனவர்கள் மீட்பு

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தாக இந்தோனேசியா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கேரள, தமிழகத்தை சேர்ந்த 3 மீனவர்கள் சென்னை வந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மரிய ஜெசிந்தாஸ். கடந்த ஏப்ரல் மாதம் அந்தமான் தீவில் இருந்து குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த 8 மீனவர்களுடன் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி‌‌ இந்தோனேசியா கடற்படையினர் சிறைப்பிடித்தனர். இதில் 4 பேரை உடனடியாக விடுதலை செய்தது. மீதமுள்ள 4 பேரை சிறையில் அடைத்துவைத்திருந்தன.

மரியஜெசிந்தாஸ் அங்கே  பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மரிய ஜெசிந்தாஸ் அடித்து கொலை செய்யபட்டு இருந்தது என உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் மீதமுள்ள 3 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மரிய ஜெசிந்தாஸ் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்தோனேசியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த இமானுவேல் ஜோஸ், ஜோமோன், சிஜின் ஸ்டீபன் ஆகிய 3 மீனவர்களை விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட 3 மீனவர்களும் விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர் அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

Tags : 3 fishermen rescued from Indonesian prison
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...