கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஓராண்டுக்கு தட்கலில் 2,000 விவசாய மின் இணைப்பு: மின்வாரியம் உத்தரவு

சென்னை: கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஓராண்டுக்கு 2,000 மின் இணைப்புகளை தட்கல் திட்டத்தில் வழங்க மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக அனைத்து பொறியாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழக அரசு 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும், வேளாண் வளர்ச்சியை ஏற்படுத்த, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, தரிசு நிலங்கள் மற்றும் அதை ஒட்டிய புறம்போக்கு நிலங்களில் அமைக்கப்படும் ஆழ்துளை மற்றும் குழாய் கிணறுகளுக்கு, ‘தட்கல்’ எனப்படும் முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்குமாறு வேளாண்துறை கேட்டுக்கொண்டது.

அதன் அடிப்படையில், ஆண்டுக்கு அதிகபட்சமாக 2,000 விவசாய மின் இணைப்புகள் வரை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புக்கான கட்டணத்தை மின்வாரியத்திற்கு, தமிழக அரசு மானியமாக வழங்கும். மேலும்,  விவசாய மின் இணைப்புகளில் 2 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கிட  வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறை உதவி இயக்குனரிடம் மின் நுகர்வு தொகை  வசூல் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: