×

வரும் 26ம் தேதி பிஎஸ்எல்வி-54 ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ

பெங்களூரு: புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் 8 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-54 ராக்கெட்டை வரும் 26ம் தேதி விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ தனது ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட் மூலம் வர்த்தக ரீதியாக 36 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை கடந்த மாதம் 23ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இதைத் தொடர்ந்து, வரும் 26ம் தேதி பிஎஸ்எல்வி-54 ராக்கெட் மூலம் ஓசன்ஷாட்-3 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் 8 சிறியரக நானோ செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. ஶ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 26ம் தேதி காலை 11.56 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.

இது குறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறுகையில்
ஓசன்சாட்-3 செயற்கைகோளுடன், அமெரிக்காவை சேர்ந்த 4 ஆஸ்ட்ரோகேஸ்ட் நானோ செயற்கைகோள்களும், ஐதராபாத்தை சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான துருவா ஸ்பேசின் தைபோல்ட் எனும் 2 நானோ செயற்கைக்கோள்களும், பூடான்சாட், பிக்ஸலின் ஆனந்த் நானோ செயற்கைகெ்கோளும் விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன,’’ என்றார்.

Tags : ISRO , ISRO launches PSLV-54 rocket
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...