2வது முறை ஜனாதிபதிக்கு கண் புரை ஆபரேஷன்

புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு கடந்த ஜூலை 25ம் தேதி பதவியேற்றார். அவருக்கு வயது 66. அவரது இரு கண்களகஞம் புரை இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதன் பேரில், கடந்த 16ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவருடைய இடது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து, நேற்று அவரது வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக ஜனாதிபதி மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், ஜனாதிபதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: