×

பொருளாதார நிலைமை சரியில்லை அநாவசிய செலவு வேண்டாம் பணத்தை மிச்சப்படுத்துங்கள்: அமேசான் நிறுவனம் அறிவுரை

நியூயார்க்: ‘பொருளாதார நிலைமை எதுவும் சரியில்லை. எனவே யாரும் அநாவசியமாக செலவு செய்ய வேண்டாம்’ என அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் அறிவுறுத்தி உள்ளார். கொரோனாவுக்குப் பிறகு வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட உலகின் பல பெரிய நாடுகளின் பொருளாதாரமும் ஆட்டம் கண்டுள்ளது. இதன் காரணமாக பல பன்னாட்டு நிறுவனங்கள் செலவை குறைக்க ஆட்குறைப்பு நடவடிக்கையை தீவிரமாக எடுத்து வருகிறது.

இந்த நிலை அடுத்த சில மாதங்களில் மோசமான கட்டத்தை எட்டக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்கா பொருளாதார மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே யாரும் அநாயவசியமாக செலவு செய்யாதீர்கள். பெரிய டிவி வாங்க நினைத்தால் அந்த முடிவை தள்ளிப் போடுங்கள். அந்த பணத்தை மிச்சப்படுத்தி வையுங்கள். புதிய வாகனம், கார், பிரிட்ஜ் உட்பட பெரிய செலவுகளை தள்ளிப்போடுங்கள். சிறு தொழில்முனைவோர் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. இப்போது எல்லா துறையிலும் மந்தநிலை நீடிக்கிறது’’ என எச்சரித்துள்ளார்.

மேலும் ஊழியர்களை நீக்க டிவிட்டர் முடிவு
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு 50 சதவீதம் ஊழியர்கள் நீக்கப்பட்ட நிலையில், விற்பனைப் பிரிவில் உள்ள மேலும் பல ஊழியர்களின் வேலையை காலி செய்ய மஸ்க் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் இன்று முதல் தொடங்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

பெண், வாழ்க்கை, சுதந்திரம்
பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற ஈரான் நாட்டு சட்டத்தை மீறியதாக கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்ட மாசா அமினி என்ற இளம்பெண் போலீஸ் காவலில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அங்கு 2 மாதமாக போராட்டம் வெடித்துள்ளது. பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டிக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் போராடி வருகின்றனர். இந்நிலையில், ஈரான் நாட்டு பெண்கள் கூடைப்பந்தாட்ட அணி ஹிஜாப் அணியாமல் போட்டிக் களத்தில் நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் ஹிஜாப் போராட்டத்தின் பிரபலமான ‘பெண், வாழ்க்கை, சுதந்திரம்’ என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளனர்.

Tags : Amazon , Economic situation, unnecessary spending, Amazon advises
× RELATED அமேசான் காடுகளில் சட்டவிரோதமாகச்...