×

சபரிமலையில் இன்று ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்: கூடுதல் பஸ்கள் இயக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. ஒரு லட்சத்துக்கும் மேல் பக்தர்கள் தரிசனத்துக்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சபரிமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருந்ததை போல மண்டல காலத்தில் பக்தர்கள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறந்த நேரம் முதல் பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். அதன்படி கடந்த 4 நாளில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை வந்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் சபரிமலையில் குவிந்து உள்ளனர். ஆகவே காலை 3 மணிக்கு நடை திறக்கும் போது பக்தர்கள் வரிசை 1 கிமீ தொலைவில் உள்ள மரக்கூட்டம் பகுதி வரை காணப்பட்டது. தரிசனத்திற்கும், நெய்யபிஷேகம் செய்வதற்கும் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து நிற்கின்றனர். இன்று 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் அதிகரித்து உள்ளதால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நிலக்கல்-பம்பை இடையேயும் கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Tags : Sabarimala ,Additional Buses Run , One Lakh Devotees Darshan at Sabarimala Today: Additional Buses Run
× RELATED பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு