காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே நடந்த மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி போலீஸ் கமிஷனர் முதலிடம்; டிஜிபி சைலேந்திரபாபு பரிசு வழங்கினார்

திருச்சி: சென்னையில் நடந்த மாநில அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் முதல் பரிசு பெற்று அசத்தினார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவுபடி, மாநில அளவிலான காவல்துறையினர் காவல் துணை கண்காணிப்பாளர் முதல் காவல்துறை தலைவர் வரையிலான அதிகாரிகளுக்கான (Pistol / Revolver) மற்றும் INSAS துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நேற்று சென்னை அடையாறில் உள்ள மருதம் (Commando Force-ல்) நடைபெற்றது.

இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகம் முழுவதிலும் உள்ள காவல் ஆணையர்கள், சரக காவல்துறை துணைத்தலைவர், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகிய காவல்துறை உயரதிகாரிகள் சுமார் 260 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் Pistol / Revolver ஆகியவைகள் (15, 20, 25, 30மீட்டர்) பிரிவுகளிலும், (INSAS Rifle) (50மீட்டர்) பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் INSAS Rifle ரக துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மேற்கண்ட போட்டிகளில் 5.56 INSAS Rifle (50மீட்டர்) ரக துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, போட்டியில் பங்கு பெற்று 26 அதிகாரிகளுக்கிடையேயான முதல் பரிசு வென்று, தங்கம் பதக்கம் வென்று அசத்தினார். துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு வெற்றி பெற்ற காவல்துறை உயரதிகாரிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: