×

10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் மோடி பாதையில் அதிமுக பயணம்; கி.வீரமணி குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: 10தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் திக தலைவர் கி.வீரமணி நேற்று அளித்த பேட்டி: சமூகத்தையும், பொருளாதாரத்தையும் இணைப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. இந்த பிரச்சினையில் அதிமுகவினர் எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா பாதையில் செல்லாமல், மோடி பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பிற்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கவில்லை.

10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை உடனடியாக எடுத்து, சட்ட போராட்டத்துக்கு தேவையான பணிகளை தொடங்கி விட்டார். இதேபோல சமூக அமைப்புகளும் தயாராகி விட்டன. எனவே ஒருபுறம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யக்கூடிய சட்ட ரீதியான போராட்டம் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். மறுபுறம் மற்ற அமைப்புகளை இணைத்து திராவிடர் கழகம் நடத்திய கூட்டத்தில் இந்த விவகாரத்தை ஒவ்வொரு ஊரிலும் மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து முற்போக்கு கருத்துள்ள, 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்க்கக்கூடிய அனைத்து கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கும் கூட்டம் சென்னையில் விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பங்கேற்க செய்வதற்காக, அவரிடம் தேதி கேட்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : ADMK ,Modi ,K. Veeramani , 10 percent reservation issue: ADMK travels on Modi path; K. Veeramani's accusation
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...