விருதுநகர் புத்தக திருவிழாவுக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுமி; கலெக்டர் பாராட்டு

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் புத்தக திருவிழாவுக்கு, தனது சேமிப்பு பணம் ரூ.4,132ஐ வழங்கிய திருவில்லிபுத்தூர் சிறுமியை கலெக்டர் மேகநாதரெட்டி பாராட்டினார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர். இவரது மகள் அஸ்மிதா, 6ம் வகுப்பு மாணவி. இவர், செலவுக்காக பெற்றோர் தரும் பணத்தை உண்டியலில் போட்டு சேமித்து வந்தார்.

இந்நிலையில், விருதுநகரில் நடைபெறும் புத்தக திருவிழாவுக்கு, அஸ்மிதா தான் சேமித்து வைத்த உண்டியல் பணம் ரூ.4,132ஐ, நன்கொடையாக விருதுநகரில் கலெக்டர் மேகநாதரெட்டியிடம் வழங்கினார். சிறுமி அஸ்மிதாவை கலெக்டர் பாராட்டினார். நிகழ்ச்சியில், திருவில்லிபுத்தூர் தாசில்தார் ரங்கசாமி, வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: