யோகாவை வலியுறுத்தி இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளும் மைசூர் வாலிபர்; குழித்துறை வந்தார்

மார்த்தாண்டம்: கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் கிருஷ்ணா (29). இவர் இன்டர்நேஷனல் யோகா ஆசிரியராக உள்ளார். மைசூரில் வைத்து ஆன்லைனில் யோகா வகுப்பு மற்றும் தினசரி ஓரிரு மணி நேரம் சொந்த வருமானத்திற்காகவும் யோகா வகுப்பு நடத்தி வருகிறார் .மற்ற நேரங்களை கிராமங்களில் சென்று இலவசமாக யோகா பயிற்சி அளித்து வருகிறார். கிருஷ்ணா இயற்கை வளங்களை வலியுறுத்தியும், யோகாவை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி மைசூரிலிருந்து  இந்தியா முழுவதும்  நடை பயணம் ஆரம்பித்தார்.  

இரண்டரை ஆண்டுகள் நடக்க உள்ளார். 15,000 கிலோ மீட்டர் கடந்து செல்கிறார். கேரள மாநிலத்தை கடந்து நேற்று தமிழகத்திற்குள் வருகை தந்தார்  குழித்துறை வந்தடைந்த கிருஷ்ணா கூறியதாவது: எனது சின்ன பருவத்தில் யோகாவை கற்றுக் கொண்டேன். செல்லும் வழியில் உள்ள பள்ளிகளில் அனுமதி தந்தால் இலவசமாக யோகா பயிற்சி அளிக்கிறேன். எனது செலவில் மரங்களை நட குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கிறேன்   நடைப்பயணத்தின் போது இரவு வேளையில் கோயில், பார்க், பஸ் ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் தங்கி விடுவேன்.  

காலை 6 மணிக்கு பயணத்தை மேற்கொண்டு பிற்பகல்12 மணி வரை நடக்கிறேன் .வெயிலின் தாக்கம் முடிந்த பிறகு மீண்டும் மாலையில் நடக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மைசூரில் இருந்து தர்மஸ்தலாவிற்கு நடை பயணம் மேற்கொண்டேன். அதன் பிறகு மைசூரிலிருந்து காசிக்கு நடைப்பயணம் மேற்கொண்டேன்.  தற்போது இந்தியா முழுவதும் நடை பயணம் மேற்கொள்கிறேன். தமிழகத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: