நாகர்கோவிலில் மாவட்ட மைய நூலகத்தில் 55வது தேசிய நூலக வாரவிழா

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மாவட்ட மைய நூலகத்தில் 55 வது தேசிய நூலக வாரவிழா நேற்று நடந்தது. முதல்நிலை நூலகர் மேரி வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் காளிதாஸ் தலைமை வகித்தார். நூலக வாரவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் சத்தியகுமார் பரிசுகள் வழங்கி பேசினார். ஓவிய போட்டியில் மாணவர் சாஹித் முதல் பரிசும், ஹரினீஸ் 2ம் பரிசும், சக்தி 3ம் பரிசும் பெற்றனர்.

பேச்சு போட்டியில் ராஜேஷ்வரி முதல் பரிசும், தர்ஷிகா 2ம் பரிசும், நிதிஷா 2ம் பரிசும், கட்டுரை போட்டியில் ராஜேஷ்வரி முதல் பரிசும், கவுசல்யா தேவி 2ம் பரிசும், பிஸ்மி 3ம் பரிசும் பெற்றனர். வடசேரி எஸ்எம்ஆர்வி, கேஎன்எஸ்கே பள்ளி மாணவ மாணவியர் அதிக பரிசுகளை பெற்றனர்.

விழாவில் ஒழுகினசேரி கே.என்.எஸ்.கே அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை ஜாக்குலின் செல்வி, வாசகர் வட்ட தலைவர் சந்திரன், பொன்னுராசன், லாரன்ஸ் மேரி, வரலாற்று ஆய்வாளர் சாகுல்ஹமீது, திருக்குறள் ஆய்வு மையத்தை சேர்ந்த குமரி செல்வன், சாமிநாதன், என்.எஸ்.கே தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட மைய நூலக இரண்டாம் நிலை நூலகர் ரபீக் முகம்மது நன்றி கூறினார். வாசகர்கள், மாணவ மாணவியர், நூலக பணியாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

Related Stories: