மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டிற்குள் ரூ.200 கோடி பயிர் கடன்: வனத்துறை அமைச்சர் உறுதி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் ரூ.200 கோடி அளவிற்கு விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் வழங்கப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார். ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 69-வது கூட்டுறவு வார விழா நடந்தது. விழாவில், மாவட்ட கலெக்டர் அம்ரித், ஊட்டி எம்எல்ஏ., கணேஷ், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்துக் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளுக்கு கேடயம் வழங்கினார். கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்கள் வழங்கி பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் 280 கூட்டுறுவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 21 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்ககள் இயங்கி வருகிறது.

நீலகிரி மாவட்டம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 335 ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 84 குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பு நிதியாண்டில் 13 ஆயிரத்து 330 பயனாளிகளுக்கு ரூ.116.64 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு இறுதிக்குள்ள ரூ.200 கோடி அளவிற்கு பயிர் கடன்கள் வழங்கப்படும். மேலும், 413 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.16.35 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 103 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.55.45 லட்சம் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்குள் இவர்களுக்கு ரூ.1 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் கைம்பெண்களுக்கு ரூ.12.80 லட்சம் அளவிற்கு 146 பெண்களுக்கு தொழில் முனைவோருக்கான கடன் உதவி ரூ.71.40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி தவணை காலத்திற்குள் கடன் தொகையை திருப்பி செலுத்துகின்ற விவசாயிகளுக்கு அவர்கள் பெற்ற பயிர் கடனுக்கான வட்டித் தொகையினை முழுவதும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கென ஒரு கூட்டுறவு பயிற்சி நிலையம் இல்லாததால், மாணவர்கள் கோவைக்கு சென்று கூட்டுறவு பட்டயப் பயிற்சி பெற வேண்டியுள்ளது. மாணவர்களின் நலன் கருதி நீலகிரி மாவட்டத்திற்கென்று ஒரு கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டிற்குள் பயிற்சி நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாநில தலைமை கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் கிளையினை நமது மாவட்டத்தில் குன்னூரில் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் நீலகரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், வங்கி உறுப்பினர்களுக்கு துரித சேவைகள் அளித்த முடியும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுவதற்குா நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரேசன் கடைகளின் தயரம் உயர்த்தப்பட்டு நீலகிரி மாவட்டத்தில் 28 ரேசன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ., தரச்சான்று பெறப்பட்டுள்ளது.

மேலும், 50 கடைகளுக்கு ஐஎஸ்ஓ., தரச்சான்று பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று ஏற்பட்டு மக்கள் கடும் அவதிப்பட்டு வந்த போது, அவர்களின் துயர் துடைக்க தமிழக முதல்வர் ரூ.4 ஆயிரம் ரேசன் கடைகள் மூலம் வழங்கி மக்களை காப்பாற்றினார். ரேசன் கடை நடத்தும் சங்கங்களுக்கு மானியமாக தமிழ்நாடு முழுவதும் அரசு ரூ.6195.18 கோடி அனுமதித்து ஆணையிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.5.5 கோடி அனுமதித்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 71 கூட்டுறவு நிறுவனங்கள் பலன் பெறுகின்றன. நீலகிரியில் கூட்டுறவு நிறுவனங்கள் ரூ.25 கோடி அளவிற்கு 6159 நபர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் ரூ.100.74 கோடி கடன்கள் தள்ளப்படி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 41 ஆயிரத்து 506 பேர் பயன் அடைந்துள்ளனர். வணிக வங்கிகளுடன் ஆரோக்கியமான போட்டியாக வளர்ந்து வரும் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகமான ஊட்டி, கோத்தகிரி, மஞ்சூர் ஆகிய பகுதிகளில் ஏடிஎம்., மையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் ஏடிஎம்., அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: