×

வீட்டு சிறைக்காக சிறையில் இருந்து நவ்லகா வந்தார்

மும்பை: எல்கர் பரிஷத் - மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதானவர் சமூக ஆர்வலர் கவுதம் நவ்லகா. 70 வயதாகும் இவர், பல்வேறு உடல் நல பாதிப்பால் அவதிப்படுவதால், வீட்டு சிறையில் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, 2 ஆண்டுக்குப் பிறகு நவி மும்பையின் தலோஜா சிறையில் இருந்து நவ்லகா நேற்று மாலை 6 மணிக்கு வெளியே வந்தார். பலத்த பாதுகாப்புடன் போலீசார் அவரை நவி மும்பையின் பெலாபூர்-அக்ரோலி பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அந்த வீட்டில் நவ்லகா ஒரு மாதத்திற்கு வீட்டு காவலில் அடைக்கப்பட்டிருப்பார். அவருக்கு வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது. சிசிடிவி மூலம் வீட்டை போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Navlaka , Navlaka came from jail for house arrest
× RELATED எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் உள்ள...