திருப்பூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்சுடன் சந்திப்பு

பெரியகுளம்: ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சென்று அதிமுக தொண்டர்களை சந்திப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி அணி அதிமுக நிர்வாகிகள், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்தை தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று சந்தித்தனர். மேலும் எடப்பாடி அணியை சேர்ந்த தாராபுரம் நகர செயலாளர் காமராஜ், சுமார் 100 நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.  அப்போது காமராஜ் பேசுகையில், ‘‘ஓ.பன்னீர்செல்வம் விரைவில் திருப்பூர் மாவட்டத்திற்கு வந்து தொண்டர்களை சந்திக்க உள்ளார்’’ என்றார். திருப்பூர் மாவட்ட செயலாளர் சண்முகம் கூறுகையில், ‘‘கொங்கு மண்டலம் என்பது மாயத்தோற்றம். அனைவரும் அங்கிருந்து ஓபிஎஸ் அணியில் சேர்ந்து வருகின்றனர் என்பதற்கு இதுவே ஆதாரம்’’ என்றார்.

Related Stories: