×

மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம் மருத்துவ குழுவிடம் போலீஸ் விசாரணை: தலைமறைவான டாக்டர்களை கைது செய்ய தனிப்படை தீவிரம்

சென்னை: சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம்எம். கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் கூலி தொழிலாளி. இவரின் மனைவி உஷா. கால்பந்து ஆட்ட வீராங்கனையான இவர்களது மகள் பிரியா (17), மூட்டு சவ்வு அறுவை சிகிச்சைபலனளிக்காமல் 14ம்தேதி பிரியா உயிரிழந்தார். இந்நிலையில், பிரியாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனிடையே, பெரவள்ளூர் காவல் நிலையத்தில் பிரியாவின் தந்தை ரவி கொடுத்த புகாரின்படி, இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்குபதிவு செய்தனர். பிரியாவின் மரணம் தொடர்பாக 12 விதமான கேள்விகளை கேட்டு, பெரவள்ளூர் காவல்துறையினர் மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு கடிதம் அனுப்பினர்.

இதையடுத்து, பிரியா மரணம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகம் காவல்துறையிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதில், மருத்துவர்கள் பால்ராம், சோமசுந்தரம், மயக்க மருந்து செலுத்திய மருத்துவர், மருத்துவ அதிகாரி (அறுவை சிகிச்சை நடைபெறும் பொழுது இருந்தவர்), எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், வார்டு பணியாளர் ஆகியோர் செய்த கவனக்குறைவு காரணமாகவே பிரியா மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, 5க்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில், தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி 2 டாக்டர்களும், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஜெகதீஷ் சுந்தராவிடம், முன் விசாரணைக்கு வந்தபோது, ‘காவல்துறையினர் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்’’ என்று நீதிபதி கூறினார். இந்த, விவகாரத்தில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இவ்வழக்கில், அரசு தரப்பு 2 வாரங்களில் பதில் தர வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

இதனால், முன்ஜாமீன் வழங்கப்படாததால், 2 டாக்டர்கள் உட்பட மருத்துவ உதவியாளர்கள் சிலர் என்று 5க்கும் மேற்பட்டோர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், முக்கியமாக அந்த 2 டாக்டர்களை கைது செய்ய, பெரவள்ளூர் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இந்தநிலையில், பிரியா மரணம் தொடர்பாக போலீசாரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மருத்துவர் குழுவினர் அளித்த விளக்கத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் மருத்துவர் குழுவினரிடம் போலீசார் தரப்பிலிருந்து, தொடர்ந்து சில கேள்விகளை கேட்டுள்ளதாகவும், அதற்கு விளக்கம் பெற வேண்டி உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* டாக்டர்களுக்கு சம்மன்
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக, சிகிச்சை அளித்த டாக்டர்கள் ராம்பால் சங்கர், சோமசுந்தரம் ஆகியோருக்கு பெரவள்ளூர் காவல் நிலையத்தில் இருந்து இன்று நேரில் ஆஜராகும்படி அவர்களது வீட்டுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர்களது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

Tags : Priya , Student Priya's death: Police probes medical team: Special force to arrest absconding doctors
× RELATED மகனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி; நீதிமன்றத்தில் தாய் தற்கொலை