நீதிக்கட்சியின் 107வது ஆண்டில் சமூக நீதிச்சுடர் அணையாமல் காக்க உறுதி: வைகோ அறிக்கை

சென்னை: நீதிக்கட்சியின் 107வது ஆண்டில், சமூக நீதிச்சுடர் அணையாமல் காப்பதற்கு உறுதி ஏற்போம் என வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நீதிக்கட்சியின் 107வது ஆண்டு இன்று தொடங்குகிறது. அனைவருக்கும் சம உரிமை, சம நீதி எனும் சமத்துவக் கோட்பாட்டு நிலை பெற தோற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சி ஆட்சியில்தான் வகுப்புரிமை ஆணை நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. நீதிக்கட்சி அரசால் இந்திய நாட்டிற்கே சமூக நீதி வெளிச்சம் பாய்ச்சியது திராவிட இயக்கம். திராவிட பேரியக்கத்திற்கு அடித்தளம் அமைத்த டாக்டர் சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், பகுத்தறிவுப் பகலவன் பெரியார், அண்ணா, டாக்டர் கலைஞர் மற்றும் திராவிட இயக்க மாவீரர்கள் நினைவைப் போற்றுவோம். சமூக நீதிச்சுடர் அணையாமல் காப்பதற்கு உறுதி ஏற்போம்.

Related Stories: