×

அதிக தண்ணீர் குடித்ததால் சிறுநீரகம் மந்தம் மூளை வீக்கத்தால் இறந்தார் புருஸ் லீ: 50 ஆண்களுக்குப் பிறகு புதிய தகவல்

புதுடெல்லி: பிரபல ஹாலிவுட் நடிகர் புருஸ் லீ. ஹாங்காங் - அமெரிக்கரான இவர் நடித்த பல படங்கள், உலகளவில் பெரும் சாதனைகள் படைத்தன. உலகளவில் பல கோடி ரசிகர்களை பெற்றவர். ஆனால், கடந்த 1973ம் ஆணடு, ஜூலை 20ம் தேதி தனது 32வது வயதில் இவர் திடீரென இறந்தார். இவருடைய  மரணம் பற்றி பல்வேறு கதைகள் கூறப்பட்டு வருகின்றன. அதில், அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவலும் ஒன்று. இந்நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மரணத்துக்கான காரணம் பற்றி புதிய  தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. ‘கிளினிக்கல் ஜர்னல்’ என்ற புத்தகத்தில், அவர்  மூளை பெரிதாகி இறந்ததாக கூறப்பட்டு இருக்கிறது. ‘புருஸ் லீ அதிகமாக உடற்பயிற்சி செய்பவர். இதற்காக அவர் அதிகளவில் பழச்சாறுகளையும், புரோட்டின் திரவத்தையும் அடிக்கடி குடிப்பார். இதன் காரணமாக, அவருக்கு அதிகளவில் தண்ணீர் தாகம் எடுக்கும்.

எனவே, அதிகளவில் தண்ணீர் குடிப்பார். ஆனால், அதிகப்படியான இந்த தண்ணீரை சிறுநீரக பிரிக்கும் சக்தியை அவருடைய சிறுநீரகம் பெற்றிருக்கவில்லை. நாளடையில் சிறுநீரகம் இந்த சக்தியை அதிகமாக இழந்ததால், அவருடைய மூளையின் அளவு பெரிதாகி விட்டது. சிறுநீரகத்தால் சிறுநீரை பிரிக்க முடியாமல் போனால், அதன் பின்விளைவாக மூளையில் நீர்வீக்கம் ஏற்பட்டு எடை கூடும். இதை மருத்துவ ரீதியாக, ‘எடிமா’ என்று அழைக்கின்றனர். வழக்கமாக மனிதனின் மூளை எடை சராசரியாக 1,400 கிராம் இருக்கும். ஆனால், புருஸ் லீயின் மூளை 1,575 கிராமாக பெரிதாக விட்டது. இதன் காரணமாகவே அவருக்கு திடீர் இறப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய பிரேத  பரிசோதனையின் மூலம் இது தெரிய வந்தது,’ என அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Bruce Lee , Bruce Lee died of kidney failure, brain swelling from drinking too much water: New information after 50 years
× RELATED அதிக தண்ணீர் குடித்ததால் சிறுநீரகம்...