இந்தோனேஷியாவில் குமரி மீனவர் மரணம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை: வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  இந்தோனேஷியா சிறையில் மீதமுள்ள 4 பேரில் ஒருவர் பின் ஒருவராக உடல் நிலை பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, மரியஜெசின் தாஸ் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவர் திடீரென மே 20ம் தேதி மரணமடைந்தார். இதில், மரியஜெசின் தாஸை, இந்தோனேசிய அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியிருப்பது தெரியவருகிறது. எனவே, இவ்விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய, தமிழக அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: