மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சர்க்கிள் தலைவர்கள் பட்டியல்: மாவட்ட தலைவர் அறிவிப்பு

சென்னை:  மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ ராஜசேகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு தேர்தல் மூலம் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு சர்க்கிள் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி, சர்க்கிள் காங்கிரஸ் தலைவர்கள் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்புதலுடன் வெளியிடுகிறேன்.

அதன்படி, 1வது சர்க்கிள் துறைமுகம் மேற்கு பகுதிக்கு செல்லப்பாவும், 2வது சர்க்கிள் துறைமுகம் மத்திய பகுதிக்கு கண்ணனும், 3வது சர்க்கிள் துறைமுகம் கிழக்கு பகுதிக்கு கருப்பையாவும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி 1வது சர்க்கிள் சேப்பாக்கம் பகுதிக்கு தணிகாசலமும், 2வது சர்க்கிள் திருவல்லிக்கேணி கிழக்கு பகுதிக்கு வாசுதேவனும், 3வது சர்க்கிள் திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக்கு ஜாஹீருதீனும், ஆயிரம்விளக்கு 1வது சர்க்கிள் ஆயிரம்விளக்கு வடக்கு பகுதிக்கு கராத்தே செல்வமும், 2வது சர்க்கிள் ஆயிரம்விளக்கு மத்திய பகுதிக்கு ஷாஜகானும், 3வது சர்க்கிள் ஆயிரம் விளக்கு தெற்கு பகுதிக்கு மணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்கும் சர்க்கிள் தலைவர்கள் கட்சி பணியில் தங்களை முழுமையாக இணைத்து கொண்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: