தாம்பரம் ஓட்டலில் தீ விபத்து

தாம்பரம்: தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள குளக்கரை அருகே சத்தார் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் மேற்கு தாம்பரம் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த முகமது நசீர் (55), ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் ஓட்டலில் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, சமையல் அறையிலிருந்து திடீரென தீப்பிடித்தது. ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஓட்டம் பிடித்தனர். உடனே, தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 2 தீயணைப்பு வாகனங்களில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ அணைப்பு  வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து எரிந்துக்கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Related Stories: