மாதவரம் பால்பண்ணை பகுதியில் உணவு பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்

திருவொற்றியூர்: மாதவரம் பால்பண்ணை பகுதியில் உணவு பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடந்தது. மாதவரம் பால்பண்ணை பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில், உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு குறித்து, ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தமிழகத்திலிருந்து அனைத்து மாவட்ட தரக்கட்டுப்பாடு அதிகாரிகளும், அலுவலர்களும் கலந்துகொண்டனர். முகாமின்போது, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரிகள் சதீஷ்குமார், செந்தில்குமார், ஜெகதீஸ்வரி, செந்தில் ஆகியோர் அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில், உணவு செறிவூட்டல், செறிவூட்டல் அரிசி, இருமுறை செறிவூட்டப்பட்ட உப்பு மற்றும் உணவு செறிவூட்டல் தரநிலை மற்றும் அரிசியின் பங்கு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories: