இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மறைந்த நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன்,’ என்று பதிவிட்டுள்ளார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மகாராஷ்டிராவில் பாரத் ஜூடோ நடைபயணம் மேற் கொண்டு வரும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு, டிவிட்டரிலும் பகிர்ந்து கொண்டார். பாஜ எம்பி வருண் காந்தியும் தனது பாட்டியான இந்திராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு நினைவு கூர்ந்தார்.

Related Stories: