உலககோப்பை கால்பந்து போட்டிகளை சட்ட விரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் இணையதளங்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உலககோப்பை கால்பந்து போட்டிகளை சட்ட விரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் 12,000 இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நாளை தொடங்கி வரும் டிசம்பர் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரபஞ்சம் முழுவதும் கால்பந்து ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நாளை கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்குகிறது. இந்த போட்டிகள் அடுத்த மாதம் 18-ம்தேதி வரை நடக்கிறது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற viacom18 media  நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. உலகக்கோப்பை போட்டிகளை சட்ட விரோதமாக பதிவு செய்து ஒளிபரப்பும் இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என viacom18 media நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பெருந்தொகையை முதலீடு செய்து ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ளதாக viacom18 media நிறுவனம் மனுவில் தகவல் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் உலககோப்பை கால்பந்து போட்டிகளை சட்ட விரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் 12,000 இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: