திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திரஜெயினுக்கு பிசியோதெரபிதான் தரப்பட்டது, மாசாஜ் அல்ல: துணை முதல்வர் சிசோடியா விளக்கம்

டெல்லி : ஊழல் வழக்கில் சிக்கி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயிந்த் அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது போன்று வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்ட விரோதம், பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த மே மாதம் அமலாக்கத்துறையால் சத்தியேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவருக்கு மசாஜ் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடியோவை வெளியிட்டு இருக்கும் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை இன்னும் கெஜ்ரிவால் பாதுகாப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கம் வேண்டும் என்றும் பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது. 58 வயதான சத்தியேந்திர ஜெயினுக்கு சிறையில் பல்வேறு வசதிகள் வழங்கப்படுவதாக அமலாக்கத்துறை ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியது. ஆனால், இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்தது. தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில் அடையாளம் தெரியாத நபர்கள் சூழ அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது உறுதியாகியுள்ளது.

இயன்முறை மருத்துவரின் பரிந்துரையின் அதே நேரம் பழைய வீடியோ என்றும் சிறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் திகார் சிறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திரஜெயினுக்கு பிசியோதெரபிதான் தரப்பட்டது என்றும் மாசாஜ் அல்ல என்றும் துணை முதல்வர் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார். சிறையில் சத்யேந்திரஜெயினுக்கு மசாஜ் செய்வது போல் வீடியோ வெளியான நிலையில்  முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் பிசியோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.          

Related Stories: