திரைப்பட படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திரைப்பட படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். காவல் உதவி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்து பின்னர் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. டம்மி ஆயுதங்களை கொண்டு செல்வதற்கான நடைமுறைகளை வகுக்க போலீசாருக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. டம்மி ஆயுதங்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என ஐகோர்ட் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா அறிவித்துள்ளார்.

Related Stories: