பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை : பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. இந்த திட்டத்திற்கு தேவையான மொத்த வேட்டி, சேலைகளை கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, கைத்தறி துறை அமைச்சர் காந்தி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேட்டி, சேலைகள் டெண்டர் குறித்தும், எவ்வளவு கொள்முதல் செய்யவேண்டும் எனவும், அதன் தரம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகின்ற பொங்கல் பண்டிக்கைக்கு வழங்குவதற்கு ஏதுவாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.  

Related Stories: