×

மருந்துகளை தேவைக்கு அதிகமாக வாங்கி காலாவதியாக்கி அரசுக்கு ரூ.27 கோடி இழப்பு: முன்னாள் உயர் அதிகாரிகள் மீது வழக்கு

சென்னை: மருந்துகளை தேவைக்கு அதிகமாக வாங்கி காலாவதியாக்கி அரசுக்கு ரூ.27 கோடி இழப்பு ஏற்படுத்திய முன்னாள் உயர் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் கிராமப்புற சுகாதார் சேவை இயக்குனர் இன்பசேகரன் உள்ளிட்ட 4 உயர் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதியப்பட்டுள்ளது. 2017-ல் பணிபுரிந்த மதுரை மண்டல மருத்துவ அதிகாரி ஜான் ஆண்ட்ரூ, கண்காணிப்பாளர் அசோக்குமார், அமர்நாத் ஆகியோர் மோசடி செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். 2017-18-ல் மதுரை மண்டலத்துக்கு ரூ.13 கோடிக்கு மருந்துகளை வாங்குவதற்கு பதில் ரூ.40 கோடிக்கு மருந்துகள் வாங்க போலி ஆவணம் தயாரித்தது அமபலமானது.  


Tags : Government loses Rs 27 crore by over-buying and expiring medicines: Case against former high officials
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...