×

கால்பந்து வீராங்கனை பிரியா மரணவழக்கில் தலைமறைவான மருத்துவர்களை பிடிக்க துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைப்பு

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் மருத்துவர்கள் தலைமறைவாகியுள்ளனர். மருத்துவர்களை பிடிக்க கொளத்தூர் துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர். ஒவ்வொரு தனிப்படையும் ஆய்வாளர் தலைமையில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ந்தேக மரணம் என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கனது கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் மாற்றப்பட்டது.

சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என போலீசார் கூறியிருந்த நிலையில், முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மருத்துவர்கள் மனு தாக்கல் செய்தனர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மருத்துவர்கள் சோமசுந்தர், பால்ராம் ஆகியோர் தலைமறைவாகினர். இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள மருத்துவர்களை பிடிக்க  கொளத்தூர் காவல் துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிப்படையும் ஆய்வாளர் தலைமையில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.Tags : Deputy Commission ,Briya , Football player, Priya death case, absconding doctors, special forces organization
× RELATED ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவை...