பனகல் பூங்கா, வி.என் சாலையில் போக்குவரத்து மாற்றம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை: பனகல் பூங்கா மற்றும் வி.என் சாலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: பனகல் பூங்கா மற்றும் வி.என் சாலையில் (தெற்கு போக் சாலைக்கு அருகில்) சிஎம்ஆர்எல் மெட்ரோ கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டு கடந்த 12ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ஒரு வாரத்திற்கான சோதனை ஓட்டம் சிறப்பாகச் செயல்படுவதால், சிஎம்ஆர்எல் கோரியபடி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் மூன்றரை ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: