அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி விலகல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 8ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் மக்கள் பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சியும், செனட் சபையில் பெரும்பான்மையுடன் பைடனின் ஜனநாயக கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து, கெவின் மெக்கார்தி மக்கள் பிரதிநிதிகள் சபையின் புதிய சபாநாயகராக குடியரசுக் கட்சியால் நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, சபாநாயகராக இருந்த ஜனநாயக கட்சியின் சான்பிரான்சிஸ்கோ எம்பி. நான்சி பெலோசி பதவி விலகினார்.நேற்று அவருக்கு ஜனநாயக கட்சி சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில் பேசிய அவர், `இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க, அடுத்த தேர்தலில் ஷபோட்டியிட மாட்டேன்,’ என்று கூறினார்.

Related Stories: