காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீரின் மசில் செக்டார் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி 3 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா செக்டாரின் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி அருகே உள்ள மசில் செக்டார் பகுதியில் நேற்று மாலை திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 3 வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி புதைந்தனர். தகவல் அறிந்த மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 3 வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். வீரமரணம் அடைந்தவர்கள் சவுவிக் ஹஜ்ரா, முகேஷ் குமார், கெய்க்வாட் மனோஜ் லட்சுமண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: