×

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினமும் 10 வழக்கை விசாரிக்க வேண்டும்: தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு

புதுடெல்லி: தினமும் பத்து வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் அனைத்து அமர்வு நீதிபதிகளும் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவிட்டு உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கடந்த 9ம் தேதி டி.ஒய். சந்திரசூட் பதவியேற்றதும், வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறையை அமல்படுத்தினார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் நேற்று அவர் பிறப்பித்துள்ள புதிய உத்தரவில், ‘உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் மனுக்கள், ஜாமீன் கோரிக்கைகள் என தினமும் பத்து வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் விசாரிக்க வேண்டும். தற்போது, 30 ஆயிரம் மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் இந்த அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று கூறியுள்ளார்.

Tags : Supreme Court ,Chief Justice , Supreme Court judges to hear 10 cases daily: Chief Justice orders action
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...