×

சன் டைரக்டில் பார்க்கலாம்: தமிழில் ரசிக்க ஜியோ ஆப்

மும்பை: கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. நாளை முதல் டிச.18ம் தேதி வரை நடைபெறும் ஆட்டங்களை ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் மட்டுமின்றி ஜியோ ஆப் மூலமாகவும் பார்த்து ரசிக்கலாம். ஸ்போர்ட்ஸ் 18 சேனல் இணைப்பை சன் டைரக்ட், டி2எச், ஜியோ டிவி, ஏர்டெல் டிஜிட்டல், டிஷ் டிவி, டாடா பிளே ஆகிய டிடிஎச் சேவைகள் மூலம் பெறலாம். ஸ்போர்ட்ஸ் 18 சேனல்களில் ஆங்கிலம், இந்தி வர்ணனைகளுடன் கால்பந்து ஆட்டங்கள் ஒளிபரப்பாகும். ஜியோ ஆப் மூலம் தமிழ், மலையாளம், பெங்காலி ஆகிய மொழி வர்ணனையுடன் ஒளிபரப்பு செய்யப்படும். தமிழ் வர்ணனையை முன்னாள் வீரர்கள்  ராமன் விஜயன், நல்லப்பன் மோகன்ராஜ், தர்மராஜ் ராவணன், விஜய் கார்த்திகேயன் ஆகியோர் செய்ய உள்ளனர். ஜியோ ஆப் சேவையை பிஎஸ்என்எல், விஐ, ஏர்டெல், ஜியோ செல்போன் இணைப்புகள் மூலம் சந்தாதாரராகி பதிவிறக்கம் செய்து பார்த்து மகிழலாம்.

Tags : Watch Sun Direct: Enjoy Jio App in Tamil
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...