அருணாசலத்தின் முதல் புதிய விமான நிலையம்

இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்ட டோன்யி போலோ விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அருணாசலப் பிரதேசத்தில் விமான நிலையம் இல்லை. 80 கிமீ தொலைவில் அசாமின் வடக்கு லக்கிம்பூரில் உள்ள லிலாபரி விமான நிலையம் தான் இதற்கு அருகில் உள்ள ஒரே விமான நிலையமாகும். இந்நிலையில், ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.645 கோடி செலவில், அருணாச்சல பிரதேசத்தல் பசுமை விமான நிலையம் கட்டப்பட்டு வந்தது. இதன் பணிகள் முடிந்த நிலையில், இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு, விமான நிலையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விமான நிலையத்துக்கு, ‘டோன்யி போலோ’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை  திறந்து வைக்கும் பிரதமர் மோடி, மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள 600 மெகா வாட்ஸ் காமெங் நீர் மின் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.

Related Stories: