பெண் ஆசையில் மயங்கி பாக்.கிற்கு உளவு சொன்ன வெளியுறவு ஊழியர் கைது

புதுடெல்லி: பாகிஸ்தான் உளவு அமைப்பு பெண்களை காட்டி விரித்த வலையில் (ஹனி டிராப்) வலையில் சிக்கி, உளவு தகவல்களை கூறிய வெளியுறவு அமைச்சக டிரைவர் கைது செய்யப்பட்டார். டெல்லி ஜவகர்லால் நேரு பவனில் ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் அலுவலகம் உள்ளது. இதில் பணிபுரிந்து வந்த வாகன ஓட்டுனர் ஒருவர், தேச பாதுகாப்பு  விஷயங்கள், ரகசிய ஆவணங்கள் சம்பந்தமான விவரங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ.யில் உள்ள ஒரு நபருக்கு அளித்துள்ளார். ஐஎஸ்ஐ நபர் பெண்ணை போல் பேசி நடித்து வெளியுறவு ஊழியரிடம் இந்த தகவல்களை பெற்று உள்ளார். ஐஎஸ்ஐ.க்கு ரகசிய தகவல்களை அவர் பகிர்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஹனி டிராப்பில் வெளியுறவு அமைச்சக பணியாளர் மாட்டிக் கொண்டார். அவரிடம் இருந்து ஐஎஸ்ஐ தொடர்புடைய பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன,’ என்றன.

Related Stories: