×

தெலங்கானாவில் பரபரப்பு கேசிஆர் மகள் பற்றி பேசிய பாஜ எம்பியின் வீடு சூறை

ஐதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜ எம்பி தர்மபுரி அரவிந்த்தின் வீட்டை தெலங்கானா ராஷ்டிர சமிதி தொண்டர்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானாவில் உள்ள நிஜாமாபாத் தொகுதி பாஜ எம்பி தர்மபுரி அரவிந்த். இவர் அளித்த பேட்டியில், ‘‘டிஆர்எஸ் கட்சியை தேசிய கட்சியாக பாரத் ராஷ்டிர சமிதி என பெயர் மாற்றும் விழாவில் சந்திரசேரராவ் மகள் கவிதா பங்கேற்கவில்லை. அதிருப்தியில் உள்ள அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காங்கிரசில் சேர விரும்பம் தெரிவித்துள்ளார்’’ என்றார். டிஆர்எஸ் கட்சியின் எம்எல்சியாக உள்ள கவிதா பற்றி பாஜ எம்பி பேசியது, டிஆர்எஸ் தொண்டர்களை ஆத்திரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நிஜாமாபாத்தில் உள்ள பாஜ எம்பியின் வீடு நேற்று சூறையாடப்பட்டது. வீட்டிலிருந்த பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பான வீடியோவை வெளியிட்ட எம்பி அரவிந்த், ‘‘டிஆர்எஸ் குண்டர்கள் என் வீட்டை சூறையாடி உள்ளனர். என் குடும்பத்தினரையும் மிரட்டி உள்ளனர்’’ என்றார். ஆனால் இது தொடர்பாக போலீசில் இதுவரை எந்த புகாரும் தரப்படவில்லை. ஏற்கனவே டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகரராவ், பாஜவை கடுமையாக விமர்சிக்கும் நிலையில், இந்த விவகாரம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* பாஜவில் அழைத்தனர்
கேசிஆர் மகள் கவிதா நேற்று அளித்த பேட்டியில், ‘‘நான் கண்ணியமான அரசியல்வாதி. பாஜ.வில் இருக்கும் நண்பர்கள் மற்றும் நட்புக்குரிய அமைப்புக்கள் மூலமாக பாஜவில் சேரும்படி எனக்கு அழைப்புகள் வந்தன. இதற்கு ஷிண்டே மாடல் என்பதாகும். தெலங்கானா மக்கள் தங்களின் சொந்த கட்சியையும், தலைவர்களையும் ஏமாற்றுவதில்லை. காட்டிக் கொடுப்பதும் இல்லை. நாங்கள் பின்கதவுகள் மூலமாக அல்ல; எங்களின் சொந்த பலத்தினால் தலைவர்காக மாறுவோம். பாஜ.வில் இணையும்படி என்னிடம் கொண்டு வரப்பட்ட அழைப்பை, நான் நிராகரித்து விட்டடேன். ஏனென்றால், எனது இதயமானது எனது தலைவர் மதிப்புக்குரிய கேசிஆர் குரு இருக்கும் கட்சியில் உள்ளது’’ என கூறி உள்ளார்.

Tags : House ,BJP ,KCR ,Telangana , House of BJP MP ransacked for talking about KCR's daughter in Telangana
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!