×

சட்டங்களை முறையாக பின்பற்றி வரி செலுத்துவதில் அரசு ஊழியர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும்: வருமான வரித்துறை ஆணையர் ரத்தினசாமி பேச்சு

சென்னை: சட்டங்களை முறையாக பின்பற்றி, வரி செலுத்துவதில் அரசு ஊழியர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என வருமான வரித்துறை ஆணையர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். வருமான வரி செலுத்துவோருக்கான விழிப்புணர்வு கூட்டம் இந்திய வருமான வரி துறை சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலக அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை தலைமை ஆணையர் ரத்தினசாமி, வருமானவரித்துறை ஆணையர் ரவி ராமச்சந்திரன் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரத்னசாமி பேசியதாவது:
சட்டங்களை பின்பற்றுவதில் மற்றவர்களுக்கு, அரசு ஊழியர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும். ஆண்டு வருமான வரி கணக்குகள் மற்றும் ஆவணங்களை முறையாக சரியான நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அறநிலைய துறை சார்ந்த தொண்டு அறக்கட்டளைகளுக்கான வரி விலக்கு எண் மற்றும் வருமான வரி ஆவணங்களை 100 சதவீதம் சரியாக பெறும் அறநிலைய துறை மண்டல அலுவலகங்கள் வெளிப்படையாக பாராட்டப்படும். முன்னதாக பேசிய வருமான வரி துறை ஆணையர் ரவி ராமசந்திரன், வருமான வரி செலுத்துவதில் அறநிலையத் துறை அதிகாரிகள் தாமதம் காட்டுவதாகவும், அதற்கு உதாரணமாக இந்த கூட்டத்திற்கே அவர்கள் தாமதமாக தான் வந்துள்ளதாக விமர்சித்தார்.

Tags : Tax Commissioner ,Rathnaswamy , Government Servants, Commissioner of Income Tax in paying taxes properly by following the laws
× RELATED உசிலம்பட்டி அருகே இலவச கண் பரிசோதனை முகாம்