ராகுல் காந்திக்கு அடையாளம் தெரியாத நபர் எழுதிய கொலை மிரட்டல் கடிதம்: இந்திய ஒற்றுமை பயணத்தில் பரபரப்பு

மகாராஷ்டிரா: மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் ராகுல் காந்தி கொலைச் செய்யப்படுவார் என்கிற வாசகம் அடங்கிய கடிதத்தில் காவல்துறையினர் கைப்பற்றி விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுவரும் ராகுல்காந்தி தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிறார். அதை முடித்துக்கொண்டு அடுத்ததாக மத்தியபிரதேசம் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் அம்மாநிலத்தின் இந்தூரில் உள்ள ஒரு இனிப்பு கடையின் வாயிலில் இருந்து ஒரு கடிதம் ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றினர். அதில் ராகுல் காந்தி விரைவில் கொல்லப்படுவார் என்கிற வாசகம் எழுதப்படிருந்ததை அடுத்து கடிதத்தை எழுதிய அடையாளம் தெரியாத நபர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

வீரசாவர்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உதவி செய்தவர் என்றும் அச்சத்தின் காரணமாக மன்னிப்பு கடிதம் எழுதியவர் என்றும் மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி பேசியதை அடுத்து அடுத்த நாளே அவருக்கு மத்திய பிரதேசத்தில் கொலை மிரட்டம் விடுக்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: