×

சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடிகர் இளங்கோ குமரவேலிடம் செல்போன் பறிப்பு: பைக்கில் வந்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்து சென்ற நடிகரும், ‘பொன்னியின் செல்வன்’ திரைக்கதை ஆசிரியரான இளங்கோ குமரவேலிடம் செல்ேபான் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் இளங்கோ குமரவேல்(57). நடிகரான இவர், ‘அபியும் நானும்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைக்கதை ஆசிரியரான இவர், அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று திரைப்படத்தின் திரைக்கதை எழுதியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்து பட்டினப்பாக்கம் நோக்கி தனது செல்போனில் பேசியபடி நடந்து சென்றார்.

அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், இளங்கோ குமரவேலிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத நடிகர், தப்பி ஓடிய நபர்களை பின்னால் சிறிது தூரம் துரத்தினார். ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் சம்பவம் குறித்து நடிகர் இளங்கோ குமரவேல் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து செல்போன் பறித்து சென்ற வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.



Tags : Ilango Kumaravel ,RA Puram ,Chennai , Cell phone stolen from actor Ilango Kumaravel in RA Puram, Chennai: Police net on bike-borne suspects
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்